Wednesday, January 21, 2009
{காதலிகும் போது}>>>
உறக்கத்தையும் உணவையும்
ஊருக்கு அனுப்பிடுவர்
பட்டப் பகலில் நிலவு காண்பர்
நடுநிசியில் கதிர்கள் சுடுதென்பர்
நட்சத்திரங்களை கணக்கெடுப்பர்
அதிலொன்று குறையினும் கேட்பர்
எங்கும் அவள் முகம் தெரிதென்பர்
புல் தேக்கிய பனியில் முகம் காண்பர்
பூக்களோடு பேசித் திரிவர்
பூவைப் பறிக்க மனமஞ்சுவர்
புறாக்களை தூது விடுவர்
பேசும் எதிலும் அவள் பெயர் நெடி சேர்ப்பர்
இமைப்பொழுது தாமதமும் ஈராண் டென்பர்
கடிகாரம் கழட்டி வைத்து வருவர்
நேரஞ் சொல்லும் நிழலை வெறுப்பர்
தொடுதலில் விருப்பமின்றி தொலைவு கொள்வர்
தொட்டுச் செல்லும் தென்றல் கடிவர்
கண்களால் கடிதம் எழுதிக் கொள்வர்
குழந்தைகளை முத்தமிட்டு கொடுப்பர்
அதே இடத்தில் மறுமுத்திரை எதிர்பார்ப்பர்
பொழுதை நடந்தே களிப்பர்
நீண்ட பாதைக்கு நன்றி சொல்வர்
நீளாத பாதையை குறையெனக் கொள்வர்
புயலடித்தாலும் தென்றலென்பர்
தென்றல் வீசினால் காற்றெங்கே யென்பர்
யாவருமிருந்தால் தனிமையெனக் கொள்வர்
அவன் மட்டுமிருந்தால் யாவரும் என்பர்
ஒரு கோப்பை தேநீரை வெகுநேரம் கொள்வர்
பேசுவது புரியாமல் கேட்பவர் விழிப்பர்
இரைச்சலிலும் இனங் கண்டு கொள்வர்
கூட்டங்களில் தன்கூடு தனி காண்பர்
பணமாயிரம் கொடுத்து பறவைகள் பெறுவர்
பெற்ற பறவைகள் பறக்க காண்பர்
மறைமுகமாக பெயர் சொல்லி திரிவர்
அது கேட்டு விட்டால் நானில்லை யென்பர்
இசைகளை விரும்பிக் கேட்பர்
ஒற்றுப்போகாத நடனம் புரிவர்
தண்ணீர் குழாய் திறந்து வைப்பர்
நிறைந்து வழிவதை மறந்து விடுவர்
கனவில் உனைக் கண்டேன் என்பர்
ஏன் சொல்லாமல் சென்றா யென்பர்
குறுஞ் சண்டைகள் தினமும் கொள்வர்
ஒரே தருணத்தில் மன்னிப்பு கேட்பர்
மழை பொழிகையில் வெளி காண்பர்
சொட்டும் துளிகளை எண்ணி தோற்பர்
வெறித்த வானத்தை வெறித்து பார்ப்பர்
கண்மூடி கண்ணாடி காண்பர்
அதிலவன் தெரிந்தால் சொல்லி நகுவர்
ராணுவமும் அறியாத ரகசிய குறிகள் வைப்பர்
அதை போட்டு குழப்பி கேட்பவர் துடிப்பர்
இரவு இரண்டு மணிக்கு கதிர்கள் மறையுதென்பர்
காலை பத்து மணிக்கு இரவு விழிக்குதென்பர்
பிரிவு நேரங்களில் விழி தேங்கக் கொள்வர்
பார்வை நேரங்களில் பிற மறந்திருப்பர்
உடலால் வேறாய்த் தெரிவர்
உயிரால் ஒன்றெனக் கொள்வர்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment