Wednesday, January 21, 2009

<காதலின் சந்தோசம்>>















பனி மூடிய பாதையைப் போல,
தரை தொடாத பாதம் போல,
மலரும் பூவின் வாசம் போல,
இயல்பாய் பூத்தது எங்கள் காதல்.

மறைந்திருந்து பார்த்து மயிலிறகாய் வருடும்
மன்னவனுக்காய் மருகும் மல்லிகையின் காதல்,
கொலுசொலி கேட்டுக் கானம் பாடும்
கன்னிக்காய் காத்திருக்கும் காளையின் காதல்.

என்நெற்றி சுருங்கினால் காரணம் கேட்டு,
என்கண் கலங்கினால் நீயும் கலங்கி,
எனக்காய் நீயும் உனக்காய் நானும்
நமக்குள் வளர்த்த உறுப்பு காதல்.

விழி நோக்கி விரல் கோர்த்து,
முடி கோதி முகம் பார்த்து,
புன்னகையாய் புது தென்றலாய் பொறுமையாய்
பொங்கி வளர்ந்தது நம் காதல்.

கட்டம் போட்டுக் கணித்துச் சொன்னான்
காவி கட்டிய கோவில் சோதிடன்
பிறைநிலவாய் வளர்ந்த எங்கள் சந்தோஷம்
பொருந்தாது பிள்ளைக்கு செவ்வாய் தோஷமென்று!

No comments:

Post a Comment