Saturday, January 24, 2009

<<தூங்காத இரவுகள்>>>



மேகத்து வின்மீன்களை
கொஞ்சம் பார் பெண்ணே
அவை ஒவ்வொன்றும்
நான் உனக்காக எழுதிய
ஆனால் உன்னால் மறுதலிக்கப்பட்டு
கசக்கி எறியப்படும் காதல் கடிதங்கள் .
அப்படியே எட்டி அந்த நிலவையும்
கொஞ்சம் கவனி கண்ணே
நான் எட்டி பிடிக்கமுடியாத தூரத்தில்
அது இருந்தாலும் ஒவ்வொரு இராத்திரிகளிலும்
என்னுடனே தூங்குகிறது .ஏனோ
எட்டியும் பிடித்து விடக்கூடிய
தூரத்தில் நீ இருந்தும் வந்து வந்து போகிறாய் தான் ஆனால் தூக்கத்தில்
கதவு தட்டும் கனவுகளில் மட்டும் .
தூங்காதிருந்த ஒரு இரவுப்பொழுதில்
பூக்களுடன் உரையாட விரும்பினேன்.
உரையாடலின் முடிவில் தான்
புரிந்தது, காலை நேர பூக்களில்
என் இந்த தண்ணீர் துளிகள் என்று.
காதலியே! அவை ஒவ்வொன்றும் தண்ணீர்
துளிகள் இல்லை . இராப்பொழுதில் உன்னை
அதிகமாய் தரிசிக்கமுடிவதில்லையே
என்று பூக்கள் வடிக்கின்ற கண்ணீர் துளிகள் அவை.
இரவு என்பது குழந்தைகளுக்கு அச்சம்
பறவைகளுக்கோ நிசப்தம்
புதுமண பெண்ணிற்கோ வெட்கம்
காதலர்களுக்கோ சுகந்திரம்
ஆனால் எனக்கோ உனது பெயரினை
மட்டும் மனனம் செய்ய சொல்லும்
பாடப்புத்தகம்.
இரவினை பற்றி இன்னொன்று
என் அத்தனை கேள்விகளுக்கும் பதில்
சொல்லும் இந்த இரவு மட்டும்
கணப்பொழுது கூட கண்முடி உறங்குவதில்லேயே
என்ன காரணம் .கொஞ்சம் பொறு
ஏன் சிரிக்கின்றாய். என் கண்களை பார்த்து
பதில் சொல்
நீயும் இரவினை எப்போதாவது காதலித்தாயா?

No comments:

Post a Comment