அன்பு காட்டினால்குறைவதொன்றும் இல்லைநிறைவது பெறுபவரின் மனமாகும்அன்பு காட்டினால்நீங்கள் நினைக்காத போதுயாருக்கோ, எங்கோஒருவரின்,நாட்குறிப்பேட்டில்நீங்கள் முதலிடம்பெறலாம்அன்பு காட்டமொழி தடையில்லைஇனம் தடையில்லைமதம் தடையில்லைமனம் மட்டுமே போதும்தாஜ்மகால் கட்டதேவையில்லைசிறு புன்னகைபோதும்உங்கள் அன்பைக் காட்டஒரு அழகானகாலை வேலையில்ஒரு அன்னியரைப் பார்த்து,ஏன் உங்கள்சொந்தங்களைக் கூடப் பார்த்துஒரு சிறு புன்னகைசெய்து பாருங்கள்அப்போது புரியும்அன்பின் மகத்துவம்அன்புநீங்கள் செய்யும்சிறந்த முதலீடுஅன்புநீங்கள் நினைக்காதநேரத்தில் பன்மடங்காய்திரும்ப வரும்!!!
அன்பு செய்து பாருங்கள்அகிலத்தை வெல்லலாம்
அன்பு செய்து பாருங்கள்கடவுளைக் காணலாம்
அன்பு செய்து பாருங்கள்குழந்தையாய் மாறலாம்
அன்பு செய்து பாருங்கள்நீண்ட நாள் வாழலாம்
அன்பு செய்து பாருங்கள்ஞாநியராகலாம்
அன்பு செய்து பாருங்கள்அறிஞனாகலாம்
அன்பு செய்து பாருங்கள்புனிதனாகலாம்
அன்பு செய்து பாருங்கள்நினைத்ததை பெறலாம்
அன்பு செய்து பாருங்கள்உங்களையும் இரசிக்கலாம்
அன்பு செய்து பாருங்கள்மகிழ்சியாய் இருக்கலாம்!!!
No comments:
Post a Comment